×

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பரிதாப உயிரிழப்பு; 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

மஸ்துங்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மசூதியில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் பலர் கூடியிருந்த இடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. முதற்கட்டமாக 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் மஸ்துங் மாவட்டத்தில் நடந்த 2வது பெரிய குண்டுவெடிப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் வேறு ஏதேனும் வெடிகுண்டு உள்ளதா என அப்பகுதியில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பரிதாப உயிரிழப்பு; 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Palusistan, Pakistan ,MASTUNG ,Balusistan, Pakistan ,
× RELATED 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3...