×

புதுக்கடை அருகே டெம்போ டிரைவர் திடீர் மாயம்

புதுக்கடை, செப்.28: புதுக்கடை சந்திப்பு அருகே விரிவிளை செல்லும் சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசிப்பவர் லாரன்ஸ் (56). அவரது மகள் சுஜி மோள் என்பவருக்கும், படந்தாலுமூடு கள்ளிக்கூட்டம் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் ரெதீஷ்க்கும் (35) கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையால் சுஜி மோள் கடந்த மாதம் 2ம்தேதி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளார். ரெதீசும், குழந்தையும் மாமனார் வீட்டில் புதுக்கடையில் வசித்து வந்தனர். ரெதிஷ் தோவாளை பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிரைவராக வேலை பார்த்து வந்து உள்ளார். கடந்த 2 வாரங்களாக அங்கு வேலை இல்லாததால் கடந்த 23-ம் தேதி மீண்டும் ஆரல்வாய்மொழியில் ஒரு புதிய செங்கல் சூளைக்கு வேலைக்கு போவதாக கூறி சென்றுள்ளார். அதன் பிறகு இதுவரையிலும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான மருமகனை கண்டுபிடித்து தருமாறு லாரன்ஸ் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புதுக்கடை அருகே டெம்போ டிரைவர் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Tempo ,Pudukadai ,Lawrence ,Virivilai road ,Dinakaran ,
× RELATED கடலூரில் சாலையோர ஆக்கிரமிப்பு இரவோடு இரவாக அகற்றம்