புதுடெல்லி: தெற்கு டெல்லியின் ஜங்புராவில் 4 மாடிகளை கொண்ட நகை கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு வாரந்தோறும் திங்கள்கிழமை விடுமுறை நாளாகும். இந்நிலையில், கடந்த ஞாயிறு இரவு கடையை மூடிய உரிமையாளர் நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்தார். அப்போது கடைக்குள் மண் சிதறிக் கிடந்ததை பார்த்து விட்டு உள்ளே சென்றவர் அதிர்ச்சியடைந்தார்.
கடையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த நகைகள் உட்பட லாக்கர் அறைக்குள் இருந்த நகைகள் என மொத்தம் ₹20 கோடி முதல் ₹25 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போயிருந்தன. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு கடைக்கு வந்து ஆய்வு நடத்திய போலீசார், கட்டிடத்தின் மொட்டை மாடி வழியாக நுழைந்து சுவரை கேஸ் கட்டர்கள் மூலம் துளையிட்டு லாக்கர் இருந்த தரைதளத்திற்கு சென்று அங்கிருந்த நகைகள் மற்றும் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தனர்.
The post டெல்லியில் துணிகரம் ரூ.25 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.
