×

மூடப்பட்ட பிறகு மெட்ரோ ரயில் கதவுகளை திறந்தால் 4 ஆண்டு சிறை: நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுக்கும் வகையில், மூடப்பட்ட கதவுகளை திறக்க முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கையாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெட்ரோவில்கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்கும் முயற்சியாக கதவுகள் மூடப்பட்டவுடன் கதவுகளை திறக்க முயற்சிப்பது, தானியங்கி கதவுகள் மூடும் போது கைவசம் உள்ள பொருட்களை தூக்கி வீசி கதவுகளை திறக்க முயற்சிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் பயணிகள் ஈடுபடுவதாகவும் இதனால் ரயில் சேவை பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன.

எனவே பயணிகளால் ஏற்படும் இத்தகைய சூழ்நிலையை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2002 பிரிவு 67ன் கீழ் ரயிலின் இயக்கத்தை தடுப்பது, தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட இருப்பதாகவும் ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதற்காக பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post மூடப்பட்ட பிறகு மெட்ரோ ரயில் கதவுகளை திறந்தால் 4 ஆண்டு சிறை: நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...