×

நெல்லை-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி

சென்னை: நெல்லை- சென்னை இடையே நாளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். இதற்காக, தமிழக மக்கள் சார்பில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டரில், ‘‘தென் தமிழகத்தின் முதல் மற்றும் தமிழகத்திற்கான 3வது வந்தே பாரத் ரயிலை நெல்லை- சென்னை இடையே நாளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் தென் தமிழகத்தையும், தலைநகரமான சென்னையையும் குறைந்த நேரத்தில் இணைக்கிறது. வந்தே பாரத் ரயில் அதிவேகம் மட்டுமல்லாது, அதிநவீன பாதுகாப்பு முறைகளுடன் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாராகி உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

The post நெல்லை-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி appeared first on Dinakaran.

Tags : Nellai ,Chennai ,Modi ,L. Murugan ,Nellie- ,PM Modi ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை பகுதியை பார்வையிட அனுமதி..!!