×

லேண்டர், ரோவரை விழிக்க வைக்க முயற்சி

சென்னை: நிலவில் 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்ட லேண்டர் மற்றும் ரோவரை விழிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் சிக்னல் கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர், ரோவரை நேற்று மாலை மீண்டும் செயல்பாட்டு கொண்டு வர திட்டமிட்டோம், ஆனால் சில காரணங்களுக்காக அதை செயல்படுத்த முடியவில்லை. இன்று மீண்டும் முயற்சிக்க உள்ளோம். ரோவரை 300 முதல் 350 மீட்டர் வரை நகர்த்த திட்டமிட்டோம், ஆனால் 105 மீட்டர் மட்டுமே நகர்ந்து. ரோவர் மீண்டும் செயல்பட்டால் இதை செய்வோம் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post லேண்டர், ரோவரை விழிக்க வைக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Lander ,Chennai ,
× RELATED சென்னை வளசவரவாக்கத்தில் உள்ள போதை...