×

இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பாஜ நிர்வாகிகள் மீது போலீஸ் வழக்கு

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆரம்ப நிகழ்ச்சியில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பேசினர். அதில் ஆர்எஸ்எஸ் மாவட்ட செயலாளர் ஜி.கே.சிவசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரை அவதூறாக பேசியதோடு சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசினார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜி.கே.சிவசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே நிகழ்ச்சியில் இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை அவதூறாக பேசியதோடு, பிற மதத்தினர் இடையே கலகத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராஜேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதேபோல் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய காரைக்குடி மாவட்ட பாஜ பொது செயலாளர் குணசேகரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பாஜ நிர்வாகிகள் மீது போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Hindu Front ,RSS ,BJP ,Virudhunagar ,Vinayagar Chaturthi procession ,Dinakaran ,
× RELATED ‘ஆப்பாயில்’ ஏன் உடஞ்சிச்சு? இந்து...