×

குறுவை நெற்பயிருக்கு காப்பீட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: குறுவை நெற்பயிர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தொடர்ந்து 3வது ஆண்டாக நடப்பாண்டிலும் குறுவை நெற்பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்படவில்லை. குறுவை நெற்பயிர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். குறுவை பயிர்களுக்கான காப்பீட்டு தேதி ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், நடப்பாண்டை சிறப்பு நேர்வாக கருதி இம்மாத இறுதி வரை காப்பீட்டை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, 2022-23ம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு இழப்பீடாக ரூ.560 கோடி காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். 7 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு ரூ.560 கோடி என்றால், ஏக்கருக்கு ரூ.8000 மட்டுமே கிடைக்கும். இது போதுமானதல்ல. பயிர்க்காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரமாவது காப்பீடு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குறுவை நெற்பயிருக்கு காப்பீட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Anbumani ,CHENNAI ,BAMA ,president ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழக அரசு...