×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேருக்கு வாரன்ட்

சென்னை: தலைமை செயலக நேரடி உதவிப்பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்வர்ணா, மைதிலி ராஜேந்திரன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டி வரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்த போதும் அவர்கள் ஆஜராகவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் கண்டனத்துக்குரியது எனக் கூறி இரு அதிகாரிகளுக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேருக்கு வாரன்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Court ,Chief Secretariat Direct Assistant Officers ,Dinakaran ,
× RELATED கொரோனா கால பணிக்கு ஊக்க மதிப்பெண் கோரி...