
டெல்லி: இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16.50 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்கும் அணிக்கு சுமார் ரூ.6.50 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்திருக்கிறது. இந்தியாவில் அக்.5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதனால் ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் குறித்துதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பேசிக்கொண்டு இருக்கிறது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. உலக கோப்பை தொடருக்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் வருகிறது.
இந்த தொடருக்கான தங்களது அணி வீரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. எனவே, இந்தாண்டு உலக்கோப்பை தொடர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை குறித்த விவரங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 .19 கோடி (4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதுபோன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடையும் (இரண்டாவது) அணிக்கு சுமார் ரூ.16.50 கோடி ( 2 லட்சம் அமெரிக்க டாலர்கள்) பரிசாக வழங்கப்படவுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்கும் அணிக்கு சுமார் ரூ.6.50 கோடி பரிசாக வழங்கப்படும். மேலும், உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு தலா ரூ.33 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை: சாம்பியன் அணிக்கு ரூ.33 கோடி பரிசு.! 2வது பரிசு ரூ.16.50 கோடி: ஐசிசி அறிவிப்பு appeared first on Dinakaran.