×

நீடாமங்கலத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம், செப். 15: அமாவாசையை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் நீடாமங்கலம், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

The post நீடாமங்கலத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Anjaneya ,Needamangalam ,Amavasai ,Santhanaramar ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி