×

முத்துப்பேட்டையில் அரசு ஊழியர் சங்க புதிய வட்டகிளை துவக்கம்

முத்துப்பேட்டை, செப். 15: முத்துப்பேட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதிய வட்ட கிளை துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். தற்காலிக வட்டக்கிளை நிர்வாகிகளின் பெயரை மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்மொழிந்தார். கூட்டத்துக்கு வந்திருந்த அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வட்டக்கிளை தலைவராக தமிழ் சுடர், வட்டச் செயலாளராக ராமசாமி, வட்ட பொருளாளராக சோழபிரபு, துணைத் தலைவர்களாக லெனின், கஜேந்திரன், தேவகி இணை செயலாளர்களாக கார்த்திகேயன், பன்னீர்செல்வம், சத்தியவதி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மணிவண்ணன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட பொருளாளர் சிவக்குமார், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் லதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் வட்டச் செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

The post முத்துப்பேட்டையில் அரசு ஊழியர் சங்க புதிய வட்டகிளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Government Employees Union ,Muthuppet ,Tamil ,Nadu ,Government ,Employees Union ,New Circle ,Branch ,Union ,New Circle Branch ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி