- ஆடி திருவிழா
- பெரியபாளையம்,
- புதுக்கோட்டை அம்மன் கோயில்கள்
- Uthukkottai
- Periyapalayam
- ஊத்துக்கோட்டை அம்மன் கோயில்கள்
- அம்மன் கோவில்கள்
- பெரியபாளையம், ஊத்துகோட்டை
- ஊத்துக்கோட்டை
![]()
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம், ஊத்துக்கோட்டை அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா தொடங்கியது. பெரியபாளையம், ஊத்துக்கோட்டையில் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் நேற்று காலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆடி மாதம் பிறந்ததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் ஆடி திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயிலில் நேற்று அதிகாலை முதல் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை வழிப்பட்டனர்.
இதேபோல் ஊத்துக்கோட்டையில் உள்ள செல்லியம்மன், அங்காளம்மன், நாகாலம்மன், சூளைமேனி காட்டு செல்லியம்மன், போந்தவாக்கம் நாட்டு நாச்சியம்மன், குமரப்பேட்டை அஞ்சாத்தம்மன், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு அம்மன் உள்பட பெரியபாளையம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் இன்று காலை முதல் சிறப்பு பூஜைகளுடன் ஆடி திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
The post பெரியபாளையம், ஊத்துக்கோட்டை அம்மன் கோயில்களில் ஆடி திருவிழா தொடக்கம் appeared first on Dinakaran.
