×

67வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் மணிரத்தினத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவர் தமிழில் முன்னனணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சிலம்பரசன் உள்ளிட்ட பல நடிகர்களை இயக்கியுள்ளார்.

இவரின் இயக்கத்தில் சமீக காலத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து அடுத்த படத்தை யாக்கை உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்தினத்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்” என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குநர் மணிரத்தினத்திற்கு இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

The post 67வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் மணிரத்தினத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Mani Ratnam ,Chennai ,M.K.Stal ,
× RELATED அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பு...