×

“ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ளும்”: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு.. பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு..!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ளும் என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துள்ளார். கழிவுகளை அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்க வேண்டும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆலை பாதுகாப்பு, ஆய்வு மதிப்பீடு, செயலற்ற இயந்திரங்களை அகற்ற ஸ்டெர்லைட் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மூலப் பொருட்கள், உதிரி பாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் கழிவு அகற்றம்: அரசுக்கு பாராட்டு

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் என்ற முடிவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பொதுமக்களும், தாங்களும் வைத்த கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசுக்கு நன்றி என பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் முக்கிய கோரிக்கைகளை தூத்துக்குடி ஆட்சியர் முற்றிலும் மறுத்தது வரவேற்கத்தக்கது எனவும் கூறியுள்ளனர்.

The post “ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ளும்”: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு.. பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sterlite ,Thoothukudi Collector ,Earth ,Thoothukudi ,Collector ,Dinakaran ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்