×

நீரிழிவுக்கு பீர்க்கங்காய்

நன்றி குங்குமம் தோழி

* பீர்க்கங்காய் செடியின் வேர், இலை, காய், பூ அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது.

* இரும்புச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ் மட்டுமில்லாமல் பல வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் இதில் உள்ளன.

* பீர்க்கங்காயை உண்டு வந்தால் நீரிழிவு, தோல் நோய், ரத்த சோகை, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அகலும்.

* பீர்க்கை இலையில் சாறெடுத்து அதை கொதிக்க வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பருகி வந்தால் சர்க்கரை நோய், ரத்த சோகை நோய்கள் கட்டுப்படும்.

* பீர்க்க இலையை அரைத்து புண்களில் தடவி கட்டுப் போட்டால் ஆறாத புண்கள்கூட ஆறிவிடும்.

* சொறி சிரங்கு போன்ற அரிப்பு நோய்களுக்கும் பீர்க்க இலைச்சாறு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

* வாரத்தில் ஒருநாள் சமையலில் சேர்த்துக்கொண்டால் போதும், நோய்கள் வராமல் தடுக்கலாம்.

தொகுப்பு: ர.ஐவண்ணம், போளூர்.

The post நீரிழிவுக்கு பீர்க்கங்காய் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்