
- யூனியன் அரசு
- சிவிங்கி புலிகள்
- தில்லி
- சிவிங்கி புலிகள்
- குனோ தேசியப் பூங்கா
- மதேய பிரதேசம்
- சிவிங்கிப் புலிகள்
- தின மலர்
டெல்லி: மத்தியப்பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் ஒரே வாரத்தில் 3 சிவிங்கி புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து சிவிங்கிப் புலிகளை பாதுகாக்கும் திட்டத்திற்கு சர்வதேச நிபுணர்கள் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 20 சிவிங்கி புலிகள் மத்தியப்பிரதேசத்தின் குனோ பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் ஜுவாலா என்ற சிவிங்கிப்புலியின் ஒரு குட்டி கடந்த 23ம் தேதி உயிரிழந்த நிலையில், கொளுத்தும் வெப்பம் காரணமாக மேலும் 2 குட்டிகள் நேற்று உயிரிழந்தன. இதன் மூலம் குனோ பூங்காவில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 6 சிவிங்கி புலி குட்டிகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவிங்கி புலிகளின் நடமாட்டம், அதன் வாழ்விடம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க சர்வதேச நிபுணர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. சிவிங்கி புலியின் புனர் வாழ்வு மற்றும் அதன் பாதுகாப்பு சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்தும், கண்காணித்தும் அதன் அடிப்படையிலான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிவிங்கி புலிகள் பாதுகாப்பு குழுவுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
The post சிவிங்கிப் புலிகளை பாதுகாக்க சர்வதேச நிபுணர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவை அமைத்தது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.