×

பெரம்பலூர் மாவட்டத்தில் ரம்ஜான் நோன்பு துவக்கம்

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் ரம்ஜான் நோன்பு நேற்று(24ம்தேதி) முதல் கடைபிடிக்கப் படுகி றது. 56பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சிவழங்கி தொ ழுகை நடைபெற்றது. ஏழைகளின் பசியை அனை வரும் உணரவேண்டும், அதன் காரணமாக ஈகைத் தன்மை அதிகரிக்க வேண் டும் என்ற நோக்கத்தை வ லியுறுத்தி இஸ்லாமியர்க ளால் ஈகைத்திருநாள் என ப்படும் ரம்ஜான் பண்டிகை உலகெங்கிலும் கொண்டா டப்படுகிறது. நடப்பாண்டு வருகிற ஏப்ரல் மாதம் 22ம் தேதி ரம்ஜான் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் முன் பாக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து தொழுகை நடத்துவார்கள். இதன்படி நடப்பாண்டுக்கு நேற்று(23ம்தேதி) பிறை தென்பட்டதால் ரம்ஜான் நோன்பு தமிழகத்தில் (24ம் தேதி) நேற்று முதல் தொட ங்கியது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தி லுள்ள 56 பள்ளி வாசல்க ளில் நேற்றுமாலை தொழு கை நடத்தி இஸ்லாமியர் கள் நோன்பிருக்க ஆரம்பி த்தனர். 30 நாட்களும் தின மும் காலையில் 4.30 மணி முதல் மாலை 6.25 மணி வரை உணவு, தண்ணீர் இன்றி, எச்சில்கூட முழுங் காமல் நோன்பிருந்து மா லையில் 6.30 மணிக்கு நோ ன்பு முடிக்கப் படுகிறது.

நோன்பின் முடிவில்நோன் புகஞ்சி காய்ச்சி அனைவ ருக்கும் விநியோகிக்கப்ப டுகிறது. பெரம்பலூர் நகரில் மவுலா னா பள்ளிவாசல், மதரஸா பள்ளிவாசல், டவுன் பள்ளி வாசல், மக்கா, மதீனா, நூர், ஆலம்பாடி சாலை, துறைம ங்கலம் பள்ளிவாசல்கள் மற்றும் பெரம்பலூர் மாவட் டத்தின் மிகப்பெரிய வி.கள த்தூர் ஜாமியா பள்ளிவா சல், தமிழகஅளவில் புகழ் பெற்ற லெப்பைக்குடிகாடு மேற்கு மஹல்லம், கிழக்கு மஹல்லம், அரும்பாவூர், வி சுவக்குடி, பூலாம்பாடி, சத்தி ரமனை, முகமதுபட்டிணம், பெரியவடகரை, அம்மாப்பா ளையம், குரும்பலூர், பாடா லூர், பெரியம்மாபாளையம் பகுதிகளிலுள்ள 56 பள்ளி வாசல்களிலும் தினமும் 5 வேளை சிறப்பு தொழுகை கள் நடைபெற ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது.


Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி