×

ஜெயங்கொண்டம் அருகே மஞ்சுவிரட்டில் 200 காளைகள் சீறிப்பாய்ந்தன

ஜெயங்கொண்டம்:ஜெயங்கொண்டம் அருகே நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் 200 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சுத்துகுளம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி துவங்கியது. இதனை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சுத்துகுளம் சுற்றி உள்ள 16 கிராமங்கள் பாளையக்காடு என்று கூறப்படுகிறது. இந்த விழா தொடர்ந்து பங்குனி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை மாரியம்மன் கோவில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், மறுநாள் புதன் கிழமை முனிஸ்வரர் கோவில் வழிபாடு நடைபெறும் அதன் படி நேற்று பங்குனி புதன்கிழமையை முன்னிட்டு மஞ்சு விரட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டது.

இதில் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டுள்ளன. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளுக்கு பரிசாக வேட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். மீன்சுருட்டி காவல் நிலைய போலீசார் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாதபுரம் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியம் நெப்போலியன் (37), புதுப்பாளையம் சுபாஷ் (20) சோழங்குறிச்சி சிவக்குமார் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

Tags : Manjuvirat ,Jeyangondam ,
× RELATED திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம்