×

குப்பை கிடங்கில் பயங்கர தீ

மேலூர், மார்ச் 21: மேலூர் நான்கு வழிச்சாலையில், மலம்பட்டி அருகே, மேலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சேரும் குப்பைகளை கொட்டும் கிடங்கு நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குப்பைக்கிடங்கில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றியது. இந்த தீ வெகு வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயினை அணைத்தனர். இந்த குப்பை கிடங்கில் கடந்த மாதமும் இதே ேபால் தீப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி