×

மின்கம்பம் முறிந்ததால் பரபரப்பு செட்டிகுளம் கிராமத்திலிருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு பூக்கள் ரத ஊர்வலம்

பாடாலூர்: பாடாலூர் அடுத்த செட்டிகுளம் கிராம மக்கள் சார்பில் திருச்சி மாரியம்மன் கோயிலுக்கு பூக்கள் ரதம் ஊர்வலம் தாரை தப்பட்டையுடன் கொண்டு செல்லப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பூ ரதம் கொண்டு செல்வது வழக்கம். இந்தாண்டு நேற்று இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்பு தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் பூச்சொரிதல் வீதி உலா மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதிஉலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பூஜை பொருட்கள் வைத்து அபிஷேகம் செய்தனர். இறுதியாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு டிராக்டர் மூலம் பூக்கள் ரதம் கொண்டு செல்லப்பட்டது.


Tags : Chettikulam ,Samayapuram Mariamman ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்டவர் உறவினர்களிடம் ஒப்படைப்பு