×

தென்பரையில் எஸ்ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி துவக்கம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்த தென்பரையில் இயங்கும் இலவச பயிற்சி மையம் கடந்த 2016ம் ஆண்டு முதல் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த மையத்தில் அரசு பணியில் சேர்ந்த மாணவருக்கு பாராட்டு மற்றும் எஸ்ஐ தேர்வுக்கான பயிற்சி தொடக்க விழா தலைவர் மனோகரன் தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் சாந்தகுமார், சமுதாயக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நில அளவையாளர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று கடலூர் மாவட்டத்தில் பணி நியமனம் பெற்ற பயிற்சி மையத்தின் மாணவர் ஜெயக்குமார் பாராட் டப்பட்டார்.

விரைவில் அறிவிக்கப்பட உள்ள எஸ்ஐ தேர்வுக்கான பயிற்சி வகுப்பை திருமக்கோட்டை எஸ்ஐ ரவீந்திரன் தொடங்கி வைத்து பேசுகையில், இளைஞர்கள் உங்கள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். தொடர் முயற்சியாலும், பயிற்சியாலும் வெற்றியை எளிதாக பெறலாம். அனைவரும் அரசு பணியிலும் எங்களைப் போன்ற காவல்துறை பணியிலும் சேர்ந்து மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். பயிற்சி மைய முதல்வர் ஆசிரியர் வைரமுத்து பேசுகையில், வாழ்க்கையில் பின்தங்கியுள்ள குறிப்பாக கிராமப்புற மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயார் படுத்துவது எங்களது நோக்கம். அதில் ஒவ்வொரு நாளும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பயிற்சி மையத்திற்கு வரும் அனை வரையும் வெற்றி பெற வைக்க கடுமையாக எங்கள் உழைப்பை கொடுப்போம் என்றார். முன்னதாக பயிற்சி மைய நிறுவனர் .சுப்ரமணியன வரவேற்றார். சமுதாய குழும பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.


Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு