×

அறந்தாங்கி அருகே 3 டன் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

திருமயம்,: அறந்தாங்கி அருகே அதிகாரிகள் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 3 பேர் மீது வழக்கு பகிர்ந்து கைது செய்தனர். தமிழ்நாடு சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி அருண் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொதுவிநியோக திட்ட ரேஷன் அரிசி, மண்ணென்ணெய், கலப்பட டீசல் கடத்துதல், பதுக்கவது சம்மந்தமாக கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுபடுத்த வேண்டும் என்று வழங்கிய உத்தரவின்பேரில் திருச்சி மண்டல எஸ்பி சுஜதா மேற்பார்வையில் தஞ்சாவூர் சரக டிஐஜி சரவணன் தலைமையில் புதுகோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் பகுதியில் வாகன தணிக்கயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் சட்ட விரோதமாக சுமார் 3 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரால் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இது சம்பந்தமாக மாவடிப்பட்டி சுப்பிரமணியன் மகன் ராமு (28), அறந்தாங்கி கணபதி (58), போசம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கருப்பையா(39) ஆகியோர் மீது மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags : Aranthangi ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு