×

2 டிராக்டர்கள் பறிமுதல்

பொன்னமராவதி, : பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி பாறைக்களம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டவுடன் இரண்டு டிராக்டர்களையும் அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து இரண்டு டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags :
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி