×

கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை

அரூர்: மொரப்பூர் அருகே வனப்பகுதியில், கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மொரப்பூரிலிருந்து கல்லாவி செல்லும் சாலையில், எம்.தொட்டம்பட்டியில் பள்ளிக்கு அருகாமையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், அதிகளவில் கருவேல மரங்கள் உள்ளது. பொதுவாக கருவேல மரங்கள் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சும் தன்மை கொண்டவை. கோடைக்கு முன்பே கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், ஓரளவிற்கு உள்ள நிலத்தடி நீரையும் கருவேல மரங்கள் உறிஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மரங்களை வனத்துறையினர் முற்றிலுமாக அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக பயன்தரும் மரங்களை நடவேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா