×

ரூ.50 ஆயிரம் திருட்டு

பேரையூர், மார்ச் 20: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காரைக்கேணியை சேர்ந்தவர் வைஜெயந்தி (65). இவர் நேற்று காலை தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் வைஜெயந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி