×

ஆர்ப்பாட்டம்

மேலூர், மார்ச் 20: மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மேலூர் தாலுகா குழு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் வேல்பாண்டி, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பாலா, தாலுகா செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ராஜேஸ்வரன், ராஜாமணி, கதிரேசன், முருகேசன், முருகன், பாண்டி, தனசேகரன், குமரன், சேகர், மணவாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி