×

கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்-ன்

மதுரை, மார்ச் 19: மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்-ன் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மேல மாசி வீதி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக மதுரை பொன்னகரம் வெள்ளிவீதியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் கலந்து கொண்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அரசு மற்றும் அரசு உதவி பெரும் 16 பள்ளிகளை சேர்ந்த 180 மாணவிகளுக்கு கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மலபார் குழுமம் சார்பாக மொத்தம் சுமார் ரூ.15.92 லட்சம் மதிப்பிலான காசோலையை மாணவிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன், மதுரை மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், மதுரை மாநகராட்சி 56வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள், தலைமை ஆசிரியர் வெள்ளிவீதியார் மாநகராட்சி மகளிர் மேல் நிலை பள்ளி அய்யர், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர் சுதீர் முகமது, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் மேல மாசி வீதி கிளை இணை தலைவர் சிஹாபுதீன்,மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் மதுரை விஷால் டி மால் கிளை இணை வர்த்தக மேலாளர் ரஞ்சித்.

ஆகியோர் உடனிருந்தனர். இவை தவிர மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன்முயற்சிகள் இதரகாரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ