×

13வது அறிவியல் ஆலோசனை கூட்டம்

பாப்பாரப்பட்டி, மார்ச் 19: பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 13வது அறிவியல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்தார். விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் துவக்கி வைத்தார். அப்போது, சந்தையுடன் இணைந்த கூட்டுப்பண்ணையம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய பயிர் ரகங்கள் குறித்து விளக்கினார். பாப்பாரப்பட்டி அறிவியல் வேளாண்மை மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, உதவி பேராசிரியர் தெய்வமணி ஆகியோர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பரிந்துரைகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

கூட்டத்தில் திருச்சி வேளாண்மை கால்நடை மற்றும் தோட்டக்கலை மண்டல இணை இயக்குனர், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம், தர்மபுரி கால்நடை அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரிமங்கலம் ஆலம்பாடி மாடுகள் ஆராய்ச்சி நிலையம், வேளாண் பொறியியல் துறை, விதைச்சான்று, பட்டுவளர்ப்பு, வனத்துறை மற்றும் அங்ககச்சான்று துறை, வேளாண் பல்கலைகழக மேலாண்மை உறுப்பினர், வேளாண்மை அறிவியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு, வரும் ஆண்டில் செயல்படுத்த வேண்டிய செயல்பாடுகள் குறித்து பேசினர். பூச்சியியல் உதவி பேராசிரியர் ராஜபாஸ்கர் மற்றும் மண்ணியல் துறை இணை பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். உதவி பேராசிரியர் தங்கதுரை நன்றி கூறினார்.

Tags : 13th Scientific Consulting Meeting ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா