×

தஞ்சாவூரில் மின்வாரிய தொழிற்சங்க வாயிற்கூட்டம்

தஞ்சாவூர், மார்ச் 18: ஊதிய ஒப்பந்தம், காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 ம் தேதி சென்னையில் நடைபெறும் கோட்டை நோக்கி பேரணியை விளக்கி வாயிற்கூட்டம் தஞ்சாவூரில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற 1.12.2019 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும், காலியாக உள்ள 56,000 ம் காலிப்பணியிடங்களை நிரப்புவது, அரசாணை எண் 100 ன் படி பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், மின்வாரிய ஊழியர்கள் பெற்று வந்த 23 சலுகைகளை பறிக்கின்ற வாரிய ஆணை எண் 2ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்,

இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கூடாது என்றும், தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்க நிர்வாகிகள் உரையாற்றினார்கள். கூட்டத்திற்கு எம்ப்ளாயீஸ் பெடரேசன் தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் ஏஐடியூசி மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி பஞ்சு ராஜேந்திரன், ஜனதா சங்க நிர்வாகி பூபதி , ஐக்கிய சங்க தலைவர் பாலமுருகன், அம்பேத்கர் சங்க ஜெயச்சந்திரன், இன்ஜினியர்ஸ் சங்க சுந்தர்ராஜ், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ராஜாராமன், ஐஎன்டியூசி செயலாளர் பால்ராஜ், ஏஇஎஸ்யு சங்க நிர்வாகி பழனிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...