×

அரியலூர் நகராட்சி பகுதிகளில் குடிநீருக்காக அபராத தொகை வசூலிக்கப்படமாட்டாது நகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்

அரியலூர்: அரியலூர் நகராட்சி பகுதிகளில் இனி குடிநீருக்காக அபராதத் தொகை வசூலிக்கப்படமாட்டாது என்று நகர் மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர்(பொ) தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அலுவலர் செந்தில், நகர் மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தை வாசித்தார். அதில் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு, அதற்கான கட்டணம் 3 மாதத்துக்கு ரூ.180 வசூலிக்கப்படுகிறது. குடிநீர் கட்டணம் செலுத்த தவறினால், அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 8 எண்ணிக்கையிலான அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்பகுதிகள் உள்ளதால், அவர்களால் அபராதத் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் அனைத்து பொதுமக்களும் குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கு மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.குடிநீர் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுத்துக்கின்றனர். இதனால் நகராட்சியின் குடிநீர் கட்டணம் வசூல் பாதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி எதிர்வரும் நிதியாண்டிலிருந்து அபராதத்தொகை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளித்த நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தார். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...