×

பெரம்பலூர் /அரியலூர் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும்

தா.பழூர், பிப்.21: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தனிநபர் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி சோழமாதேவி கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் இந்திய எழுத்தறிவு திட்டம் இணைந்து தனிநபர் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி தலைமையில் நடைபெற்றது. இதில் திட்ட மேலாளர் விமலா, பள்ளி கல்வியாளர் சங்கரி, பாஸ்கர் உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன் மற்றும் ஆசிரியர் பழனிவேல் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தூய்மையாக இருக்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும். பள்ளி சீருடைகள் சுத்தமாக இருக்க துவைத்து அணிந்து வர வேண்டும். தலைமுடி மற்றும் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற சுகாதாரத்தை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் தடை இன்றி நாம் கல்வி பயில முடியும். சரிவிகித உணவு முறை ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். இயற்கையான காய்கறிகள் உட்கொள்ள வேண்டும் என பல்வேறு வழிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இதனை மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கதறினர். மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் பள்ளிகளுக்கு அறிவியல் சார்ந்த கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...