×

அடப்பன்வயல் அங்காடியில் தேசியக்கொடி விற்பனை

புதுக்கோட்டை, ஆக.11: சுதந்திரதினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்ெகாடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி ரேஷன்கடைகளில் தேசியக்ெகாடி ரூ.25க்கு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த தேசியக்கொடியின் விற்பனையை புதுக்கோட்டை அடப்பன்வயல் அர்பன் எண் 15 அங்காடியில் கூடுதல் பதிவாளர் ரமணிதேவி துவக்கி வைத்தார். இதில் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் தனலட்சுமி மற்றும் துணைப்பதிவாளர்கள், கள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Adappanwayal ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி