×

பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்


பெரம்பலூர், மே 26: பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு ஆராய்ச்சிக் குழுமம் சார்பாக வாகன ஓட்டுநர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவகத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், பெட்ரோலிய சேமிப்பு ஆராய்ச்சி குழுமம் இணைந்து நடத்திய வாகன ஓட்டுநர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தில் பணிபுரியும் பஸ் ஓட்டுனர்கள் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர், கணேசன் ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி வாகனத்தை இயக்க வேண்டும். வாகனத்தை மித வேகத்தில் ஓட்டி எரிபொருளை சிக்கனப்படுத்தி சுற்றுசூழலையும், பணத்தையும் சேமிக்க வேண்டும். குடித்து விட்டோ செல்போன்களில் பேசிக் கொண்டோ வாகனத்தை ஓட்டக்கூடாது. பள்ளி வாகனங்காளை இயக்கும்போது மிகுந்த எச்சரிக்கையாக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி, வாகனத்தை இயக்கும்போது சீட் பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும். மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும். கவனக்குறைவாக வாகனத்தை இயக்கக் கூடாது என்று எடுத்துக் கூறினார். பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி கழக அதிகாரி ஜெயக்குமார் பேசுகையில், பெட்ரோலிய பயன்பாடுகளை குறைத்து சுற்றுச் சூழலைப் பாதுகாத்து நிலையான வளர்ச்சியை எட்டவேண்டும் என்றார். இந்தக் கருத்தரங்கில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் பஸ் மேலாளர்கள், வாகனஓட்டுநர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tags : Perambalur RDO ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...