×

மாசி மாதத்தில் நிறைவடைந்த முகூர்த்த நாள் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட திருமணங்கள்

சேலம், மார்ச் 15:மாசி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான நேற்று சேலம் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. இதனால் திரண்ட கூட்டத்தால் கோயில்கள் களை கட்டியது தமிழ் மாதங்களில் தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை உள்ளிட்ட மாதங்களில் வளர்பிறை, தேய்பிறை முகூர்த்த நாட்கள் வரும். மற்ற மாதங்களில் முகூர்த்த நாட்கள் இருக்கும். ஆனால் இந்த மாதங்களில் ஒரு சிலர் மட்டுமே திருமணம் செய்வார்கள். இந்த நிலையில் நடப்பாண்டு தமிழ் மாதமான மாசியில் ஏழு முகூர்த்த நாட்கள் வந்தது. அதில் நிறைவு நாட்களாக நேற்றுமுன்தினமும், நேற்றும் (13,14ம்தேதிகள்)  ஏராளமானோர் திருமணம் செய்ய திட்டுமிட்டு இருந்தனர். இதன்படி ஏராளமான திருமணங்கள் நடந்தது.

அந்த வகையில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதில் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயிலில்  64 ஜோடிகளுக்கும், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் 58 ஜோடிகளுக்கும், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயிலில்  13 ஜோடிகளுக்கும், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 8 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. இதேபோல் சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், சேலம் கோட்டை பெருமாள் கோயில் மற்றும் சிவன், அம்மன், விநாயகர், முருகன் மற்றும் பெருமாள் ேகாயிலில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர், கபிலர்மலை முருகன், தர்மபுரி கல்யாணகமாட்சி, கிருஷ்ணகிரி சந்திரசுடேஸ்வரர் என்று அனைத்து கோயில்களிலும் திருமணங்கள் நடந்தது. இந்த வகையில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க வந்த உறவினர்கள் கூட்டத்தால் அதிகாலையிலேயே அனைத்து கோயில்களும் களை கட்டியது.

Tags :
× RELATED பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்