- ஓமலூர்
- பொங்கல் திருவிழா
- ஓமலூர் சந்தை
- தென் இந்தியா
- பெருமாள்
- கேரளா
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடக
- தெலுங்கானா...
ஓமலூர், ஜன.3: பொங்கல் பண்டிகையையொட்டி, ஓமலூர் சந்தையில் ரூ.6 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது. ஓமலூர் அருகே பெருமாள் கோயிலில், தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற மாட்டு சந்தை கூடியது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக, காங்கேயம், உம்பளச்சேரி, புளியகுளம், பர்கூர், தேனிமலை மாடு, காரிமாடு, செவலை எருது, மயிலை ஆகிய பாரம்பரிய நாட்டு மாட்டினங்களை விவசாயிகள் வாங்கினர். இந்த காளைகள், ஜல்லிக்கட்டு மற்றும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், பசுக்கள், இளம் கன்றுகள், எருமைகள், இறைச்சி மாடுகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கால்நடை ரூ.10,000த்தில் துவங்கி ரூ.1 லட்சம் என, ரூ.6 கோடிக்கு மேல் வார்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
