×

பெரம்பலூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து நாகை, பணம் கொள்ளை

பெரம்பலூர்,ஜன.22: காரியானூரில். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்டம், காரியானூரை சேர்ந்தவர் ருக்குமணி (35). இவர் 20ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வயல் வேலைக்கு சென்றுள்ளார். மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு 2 பவுன் தங்க சங்கிலி ரூ.3,500 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து கை.களத்தூர் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபணர்கள் வரவழைக்கப்பட்டு திருடர்கள் குறித்து தடயங்களை சேகரித்தனர்.மேலும் இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Naga ,Perambalur ,
× RELATED நாகையில் நாளை மீனவர்கள் குறைதீர் கூட்டம்