×

சோளிபாளையம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கோரி அமைச்சரிடம் மனு

திருமுருகன்பூண்டி, ஜன.3:  திருப்பூர், 15 வேலம்பாளையம் அடுத்துள்ள சோளிபாளையம், பாட்டையப்பன் நகர், கிழக்கு தோட்டம் பகுதி பொதுமக்கள், கோயில் கமிட்டியினர் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றி கொடுக்க வலியுறுத்தி 15 வேலம்பாளையம் நகராட்சி முன்னாள் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.பி.மணி தலைமையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:
சோளிபாளையம் பகுதியில் கழிவுநீரை வெளியேற்ற ரேஷன் கடை பின்புறம் ஒரு பம்ப் அமைத்து அதிலிருந்து மின்மோட்டார் மூலம் வெளியேற்ற வசதி செய்து கொடுக்க வேண்டும். அதேபோல் 25வது வார்டில் அனைத்து மண் சாலைகளையும், தார் சாலைகளாக மாற்றித்தர வேண்டும். சோளிபாளையம் பொது மயானத்திற்கு செல்லும் பாதையை அளவீடு செய்து, தார்சாலையாக அமைத்து, மின் வசதிகளோடு புதுப்பித்து தர வேண்டும். சோளிபாளையத்தில் இருந்து காவிலிபாளையம் புதூர் சாலையை தார் சாலையாக மாற்றுவதுடன் அப்பகுதிக்கு பஸ் வசதியும் செய்து தரவேண்டும்.

மேலும், 25வது வார்டு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவேண்டும். தெரு விளக்குகள் இல்லாத பகுதிகளில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். விநாயகர் கோயில் முன்பு உள்ள உபயோகமற்ற கழிப்பிடத்தை அகற்றி, அங்கு புதிய கட்டிடம் கட்டி செயல்பட வழிவகை செய்து தரவேண்டும். அதேபோல், இங்குள்ள ஆரம்ப பள்ளியை சீரமைத்து, காம்பவுண்டு சுவர் கட்டித்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Cholipalayam ,
× RELATED தொல்லியல் துறைக்கு கட்டணம்...