×

மகள் பாலியல் பலாத்காரம் தந்தை குண்டாசில் கைது

அரியலூர்,டிச.5: அரியலூர் அருகே பெற்ற மகளை பலாத்காரம் செய்த வெல்டிங் வேலை செய்யும் தந்தையை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். செந்துறை பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (43). இவர் தனியார் பட்டறைகளில் வெல்டிங் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தார். மேலும் அரியலூர் எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா, ஏடிஎஸ்பி திருமேனி, டிஎஸ்பி மதன், ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி சுப்பிரமணியனை ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Tags : Kundas ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டாஸில் கைது..!!