×

மக்காச்சோளப்பயிரில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு

தா.பழூர், டிச.5:அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே உள்ள வேளாண் அறிவியல் மையமும் ,திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையமும் இணைந்து அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான மக்காச் சோளப் பயிரில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டும் முறைகள் குறித்த பயிற்சி நடத்தப்பட்டது.

+பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை ஆராய்ச்சியாளர் கண்ணன் வரவேற்றார். இதில் இணைப் பேராசிரியர் பாண்டியன் பயிற்சி பற்றிய துவக்க உரையாற்றினார். மேலும் பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் பேராசிரியர் இளங்கோவன் தலைமை உரையாற்றினார். மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் சிறப்புரை ஆற்றுகையில் வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மக்காச்சோள சாகுபடி முன்னுரை பற்றி எடுத்துரைத்தார்.

மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் திருமலை வாசன் மக்காச்சோள பயிரில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றி கூறுகையில் அரியலூர் மாவட்டத்திற்கு ஏற்ற ரகங்கள், விதைநேர்த்தி, கலை மேலாண்மை, உர மேலாண்மை பற்றி கூறினார்.பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் அசோக் குமார் மக்காச்சோளம் பயிரில் வரும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றியும் மக்காச்சோளப் பயிரினை அதிக அளவு பாதிக்கும் படைப்பு நீர் மேலாண்மை பற்றி கூறினார். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ராஜா ஜோஸ்லின் மக்காச் சோளப் பயிரில் அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம் பற்றியும், மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ஷோபனா மக்காச் சோளப் பயிரில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றியும் கூறினார்.வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா மக்காச்சோள தட்டை மற்றும் இலைகளை கொண்டு எவ்வாறு ஊறுகாய் புல் தயாரிப்பது.

கறவை மாடுகளுக்கு கொடுக்கும் அளவு பற்றி செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தார். இப்பயிற்சியில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் கார்த்திக் நன்றி கூறினார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு