×

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 926 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வேலண்டினா மேரி (27), தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். ஆனால், அவர் மீது சுங்க துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரது உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீராததால் தனி அறைக்கு அழைத்து சென்று இளம்பெண்ணை சோதனையிட்டனர். அவரது உள்ளாடைகளுக்குள் தங்க பேஸ்ட்ளை மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த எடை 926 கிராம். சர்வதேச மதிப்பு ரூ.44.5 லட்சம். தங்கபேஸ்டை கைப்பற்றி, இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dubai ,Chennai ,
× RELATED துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 470 கிராம் தங்கம் பறிமுதல்