×

ரீகல் ஜூவல்லர்ஸ் சார்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய 25 ஜோடிகளுக்கு திருமண உதவி

 

சென்னை: பொருளாதார ரீதியாக பின்தங்கிய 25 ஜோடிகளின் திருமண செலவை ரீகல் ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு மாநிலத்தில் வணிகம் தொடங்கும் நிறுவனங்கள் வழக்கமாக பிரமாண்ட விழாக்கள், சிறப்புச் சலுகைகள் மற்றும் விளம்பரங்களில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால், ரீகல் ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஆழ்ந்த சமூகப் பொறுப்புணர்வுடன் தமிழகத்தில் தனது காலடியை எடுத்து வைத்துள்ளது. தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் தனது முதல் ஷோரூமை திறந்த ரீகல் ஜூவல்லர்ஸ், ரீகல் சுமங்கலி நேர்மை விழா என்ற சமூக நலத் திட்டத்தின் மூலம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய தகுதியுள்ள 25 ஜோடிகளின் திருமணச் செலவுகள் முழுவதையும் தாங்களே ஏற்பதாக அறிவித்தது.

இது குறித்துப் பேசிய ரீகல் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டி.கே.சிவதாசன், ‘‘ஒவ்வொரு புதிய தொடக்கமும் மற்றொரு புதிய தொடக்கத்தை உருவாக்க வேண்டும். திருமணம் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தாலும், குறைந்த வருவாய் ஈடு்டும் குடும்பங்களுக்கு அது ஒரு பெரும் நிதிச் சுமையாக அமைகிறது. அந்தச் சுமையைக் குறைப்பதற்காகவே இந்த நிறுவன சமூகப் பொறுப்பு திட்டம் வடிவமைக்கப்பட்டது’’ என்றார். ஷோரூம் திறப்பு விழாவின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோடிகளுக்கு திருமண உதவிக்கான உறுதிமொழிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். தமிழ் மாதமான ஆடி மாதத்திற்குரிய மரபுகளை மதிக்கும் வகையில், இந்த 25 ஜோடிகளுக்கான திருமணங்கள் ஆடி மாதம் முடிந்த பின்னரே நடைபெறும் என நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Regal ,Chennai ,
× RELATED கட்சியின் மூத்த தலைவர்கள், சட்ட...