- அக்ஷயா கோல்ட் ஹௌஸ்
- கல்யான் ஜெவெலர்ஸ்
- சிவகார்த்திகேயன்
- சென்னை
- கல்யான் ஜெவெலர்ஸ்
- அக்ஷயா தங்கா மாலிகை
- A. டி. எம்
- டி
- நகர் பனகல் பார்க்
சென்னை: கல்யாண் ஜூவல்லர்ஸ், தமிழ்நாட்டு சந்தையை முக்கிய இலக்காக கொண்டு தனது முதல் பிராந்திய வைர ஆபரண மற்றும் தங்க ஆபரண பிராண்டான ‘அக்ஷயா தங்க மாளிகை’யை (ஏ.டி.எம்), தி.நகர் பனகல் பூங்கா பகுதியில், வரும் 21ம் தேதி திறக்க உள்ளது. இதன் விளம்பர தூதராக, பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். கல்யாண் ஜூவல்லர்ஸின் அகில இந்திய அளவிலான விற்பனை செயல்பாடுகளை போல் அல்லாமல், ‘அக்ஷயா தங்க மாளிகை’ தமிழ்நாட்டு மக்களின் விருப்பங்கள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப ஆபரணங்களின் டிசைன்கள், எடை மற்றும் விலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கல்யாண் நிறுவனத்தின் பிற விற்பனை நிலையங்களுக்கு போட்டியாக இல்லாமல், தமிழ் நாட்டின் பாரம்பரியமிக்க பிராந்திய நகைக்கடைகளுக்கு இணையான நேரடிப் போட்டியாளராக ‘அக்ஷயா தங்க மாளிகை’ உருவெடுக்கும். இதுகுறித்து கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குநர் ரமேஷ் கல்யாணராமன் கூறுகையில், ‘உள்ளூர் மக்களின் எதிர்பார்புகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப செயல்படும்போது, பிராந்தியச் சந்தைகள் நீண்டகால அளவில் மிகப்பெரிய வளர்ச்சியைத் தரும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வளர்ச்சியடைந்த ஆபரணச்சந்தைகளில் ஒன்றான தமிழ்நாடு, எங்களது முதல் பிராந்திய ப்ராண்டை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற மிகச் சரியான சந்தையாகும். தமிழ்ப் பாரம்பரிய அடையாளத்தோடு, கல்யாண் ஜூவல்லர்ஸின் ஆபரணங்களை விற்பனைக்கு காட்சிப்படுத்துவதற்கான மூலதன வசதி, சமரசமில்லாத தரநிலைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சேவை போன்றவற்றை உள்ளடக்கிய அணுகுமுறையை முன்னெடுப்பதன் மூலம், எங்களது பிரான்ச்சைஸ் வழியிலான விரிவாக்க மாதிரி வாயிலாக மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட ‘அக்ஷயா தங்க மாளிகை’ மிகச் சரியான இடத்தில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக நம்புகிறோம்,’ என்றார்.
தமிழ்நாட்டில் இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய பிறகு, நாட்டின் பிற மாநிலங்களிலும் இதுபோன்ற பிராந்திய ப்ராண்டுகளை தொடங்குவது குறித்து கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் பரிசீலிக்க உள்ளது.
