×

ரூ.6 ஆயிரம் மட்டுமே பில் வந்த ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு ரூ.4.39 லட்சம் மின் கட்டணம்

 

காரைக்குடி: திண்டுக்கல்லை தலைமையிடமாக கொண்ட சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பர்மா காலனியில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு இந்த மாதத்திற்கான பில் ரூ.4,39,743 என செல்போனில் மேசேஜ் வந்துள்ளது. இதுகுறித்து முதியோர் இல்ல வார்டன் பூங்கோதை கூறுகையில், ‘‘எங்கள் இல்லத்திற்கு சாதாரணமாக ரூ.6 ஆயிரம் வரை மட்டுமே பில் வரும். திடீர் என ரூ.4 லட்சத்திற்கு மேல் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தோம். இது தொடர்பாக மின்வாரியத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. தற்போது அவசர அவசரமாக வந்த மின்வாரிய அதிகாரிகள் ரூ.15,020 மட்டும் கட்ட கூறி கையில் எழுதி கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இதற்கு உரிய கம்ப்யூட்டர் பில் தரவில்லை. மீறி கேட்டால் பில் கட்டுங்கள் என நிர்ப்பந்தம் செய்கின்றனர்’’ என்றனர்.

Tags : Karaikudi ,Karaikudi Burma Colony, Sivaganga district ,Dindigul ,Poongothai ,
× RELATED ஜிஎஸ்எம் டிரான்ஸ்மீட்டர் கருவி மூலம்...