- பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை துறை
- பழனி கோயில்
- திண்டுக்கல்
- பழனி சார் பதிவாளர்
- பாலச்சந்தர்
- உதவி பதிவாளர்
- சிவசங்கரி
- பழனி தண்டாயுதபாணி சுவாமி
திண்டுக்கல்: பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழனி சார் பதிவாளர் பாலசந்தர், சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவசங்கரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக பத்திரப்பதிவுத் துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்குத் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் மற்றும் 4 பேர் சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நில மோசடித் தொடர்பில் விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூற, தற்போது மேலும் 2 பத்திரப்பதிவுத் துறை பணியாளர்கள்/அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பல்வேறு கோணங்களில் விசாரணை நிலையில் இரண்டு அதிகாரிகள் மீது பத்திரப்பதிவுத் துறையினர் நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
