- காமன்வெல்த்
- குத்துச்சண்டை
- பிரீட்டி
- ஜெய்ஸ்மெய்ன்
- கிளாஸ்கோ
- ப்ரீத்தி பவார்
- ஜெய்ஸ்மெய்ன் லம்போரியா
- 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
- ஸ்காட்லாந்து
- கனடா
- ஸ்கார்லெட்…
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தில் நடைபெறும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் பிரீத்தி பவார், ஜெய்ஸ்மைன் லம்போரியா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
மகளிர் 54 கிலோ எடை பிரிவு பைனலில் கனடாவின் ஸ்கார்லெட் சவன்னா டெல்கடோ உடன் நேற்று மோதிய பிரீத்தி பவார் 3 சுற்றிலும் அதிரடியாக விளையாடி டெல்கடோவை திணறடித்தார். நடுவர்களின் ஒருமித்த முடிவில் வெற்றிக் கனியை தட்டிப் பறித்த பிரீத்தி, கிளாஸ்கோ தொடரின் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
மகளிர் 57 கிலோ எடை பிரிவு பைனலில் வடக்கு அயர்லாந்தின் மிஷெலா வால்ஷ் சவாலை எதிர்கொண்ட ஜெய்ஸ்மைன் லம்போரியா தனது லாவகமான நகர்வுகள், துல்லியமான அதிவேக குத்துக்களால் மிஷெலாவை திணறடித்து நடப்பு தொடரில் இந்தியாவின் 7வது தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். பாக்சிங்கில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கம் இது.
