×

தொலைபேசி மூலம் இங்கிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்டார்மருக்குப் பிறகு ஜூலை 20 அன்று பர்ன்ஹாம் இங்கிலாந்து நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முதல் தொலைபேசி உரையாடல் இதுவாகும்.

இந்த பேச்சுவார்த்தையில் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து இரு பிரதமர்களும் விவாதித்ததாகவும், பதற்றத்தைத் தணிக்கவும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாகவும் இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் பர்ன்ஹாம் உயரிய பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.

Tags : Modi ,UK ,PM ,New Delhi ,Andy Burnham ,Burnham ,
× RELATED பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க...