- 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர்
- தென் ஆப்பிரிக்கா
- ஜோகன்னஸ்பர்க்
- ICC ஒருநாள் உலகக் கோப்பை தொடர்
- ஜிம்பாப்வே
- நமீபியா
- ஐசிசி
- ஷெர்மன் ஜெய் ஷா
- கிரிக்கட் தென்னாப்பிரிக்க
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு நடத்த உள்ள ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டித் தொடருக்கான அறிமுக விழா ஜோகன்னஸ்பர்கில் கோலாகலமாக நடைபெற்றது. ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா தலைவர் ரிஹான் ரிச்சர்ட்ஸ், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத் தலைவர் தவெங்வா முகுலானி, நமீபியா கிரிக்கெட் வாரியத் தலைவர் ரூடி வான் வூரென் ஆகியோர் பங்க்கேற்று 2027 உலக கோப்பை தொடருக்கான லோகோவை வெளியிட்டு கோப்பையையும் அறிமுகம் செய்தனர்.
தென் ஆப்ரிக்காவில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள உலக கோப்பை தொடரின் (அக்.4 நவ.21) ஆட்டங்கள் ஜோகன்னஸ்பர்க், செஞ்சுரியன், டர்பன், கெபர்ஹா, குகோம்போ சிட்டி, கேப் டவுன், பார்ல், புளோயம்போண்டீன் உள்பட மொத்தம் 12 நகரங்களில் நடைபெற உள்ளன. தெ.ஆப்ரிக்காவில் மட்டும் அதிகபட்சமாக 54 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஜிம்பாப்வேயின் ஹராரே, புலவாயோ, விக்டோரியா பால்ஸில் 7 முதல் 10 ஆட்டங்களும், நம்மீபியாவின் விண்ட்ஹோக் நகரில் குறைந்தபட்சம் 3 ஆட்டங்களும் நடத்தப்படும்.
