×

ரூ.8 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

 

ராசிபுரம், ஜூலை 31: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ஆர்.கவுண்டம்பாளையம் மையத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ராசிபுரம், சிங்களாந்தபுரம், வேலம்பாளையம், கவுண்டம்பாளையம், போடிநாயக்கன்பட்டி, பாய்ச்சல், குருசாமிபாளையம், புதுச்சத்திரம், கண்ணூர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் 280 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். இதில் ஆர்சிஎச் 241 மூட்டையும், சுரபி ரகம் 31 மூட்டை வந்தது.

இதில் ஆர்சிஎச் பருத்தி அதிகபட்சமாக குவிண்டால் ரூ.9,800க்கும், குறைந்தபட்சமாக ரூ.8,869க்கும், டிசிஹெச் அதிகபட்சம் ரூ.10,500க்கும், குறைந்தபட்சமாக ரூ.10,100க்கும் விற்பனையானது. நேற்று ரூ.8 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. அவிநாசி, அன்னூர், சேலம், மேச்சேரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

Tags : Rasipuram ,R. Kaundampalayam ,Rasipuram Agricultural Producers Cooperative Sales Society ,Singalanthapuram ,Velampalayam ,Kaundampalayam ,Bodinayakkanpatti ,Paichal ,Gurusamipalayam ,Puduchattaram ,Kannurpatti ,
× RELATED மல்லசமுத்திரத்தில் தொழிலாளி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்