- பீகார்
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- பஞ்சாயத்து ராஜ்
- அமைச்சர்
- தீபக் பிரகாஷ்
- ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சி
- உபேந்திர குஷ்வாஹா
புதுடெல்லி: பீகார் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் தீபக் பிரகாஷ் தற்போது எம்எல்ஏவாக இல்லை. அவர் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாஹாவின் மகன். கூட்டணி கட்சி தலைவர் மகன் என்பதால் எம்எல்ஏ இல்லை என்றாலும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் சட்டப்படி 6 மாதம் கடந்தும் அவர் பதவி நீக்கப்படவில்லை. அவர் பதவியில் நீடிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யாகாந்த் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பீகார் அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர். அவர்கள் கூறுகையில்,’ பீகார் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படாமலேயே, அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட ஆறு மாத கால வரம்பையும் தாண்டி அவர் எவ்வாறு பதவியில் நீடிக்கிறார் என்பது குறித்து பீகார் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
இது அரசியலமைப்பின் 164(4)-வது பிரிவின் கீழ் எழும் ஒரு சட்டரீதியான கேள்வி. எம்எல்ஏவாக அல்லது சட்டமேலலைக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் ஒரு அமைச்சர் எப்படி ஆறு மாதங்களுக்கு மேலாகப் பதவியில் நீடிக்கிறார் என்பதை மாநில அரசு விளக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
